தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கவே பிரதேச செயலக விடயத்தில் சிலர் தடையாக உள்ளனர் - தவராசா கலையரசன்

Kalmunai Thavarasa kalaiyarasan Muslium
By Kanamirtha Jun 13, 2021 02:30 PM GMT
Report

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பெரியநீலாவணை-2 கிராமத்தில் அரச காணிக்குள் மண் இட்டு நிரப்பி சலவை தொழிலாளிகள் தொழிலை மேற்கொள்ளும் தோணா பகுதியினையும் ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கையில் சில முஸ்லிம் நபர்கள் ஈட்டுப்பட்டு வந்தனர்.

இது தொடர்பில் அப்பிரதேச மக்களினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலாளர், கல்முனை மாநகர ஆணையாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்தினைத் தடுத்து நிறுத்தியதோடு ஆக்கிரமிப்பாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதற்குரிய செயற்பாடுகளையும் மேற்கொண்டார்.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்,

பெரிய நீலாவணை பிரதேசத்தில் அரச காணிக்குள் அத்துமீறி அதனைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளைச் சகோதர இனத்தவர்கள் மேற்கொண்டதோடு அங்கு சலவைத் தொழில் செய்யும் தொழிலாளர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் தோணாவும் மண்ணிட்டு நிரப்பப்பட்டு அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து என்னால் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்து அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. அப்பிரதேச மக்களின் விரைவான செயற்பாட்டின் மூலம் இதனைத் தடுக்க முடிந்தது.

ஆனால் இது போன்ற பல செயற்பாடுகள் எமது மாவட்டத்தில் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விடயத்தில் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் வேளையில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களின் பின்புலங்கள் பலமாக இருப்பதன் காரணமாகவே இவர்களால் இவ்வாறான காரியங்களைச் செய்ய முடிகின்றது.

எமது நிலங்களை ஆக்கிரமிப்பதோடு மாத்திரமல்லாமல் எமது மக்களின் தொழிலிடங்களையும் வளைத்துப்போடும் இவ்வாறானவர்களின் இத்தகை செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. இவ்வாறான செயற்பாடுகள் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயார்த்தல் விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் ஏன் முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள் என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தமிழர் பிரதேச காணிகளை அபகரிப்பதற்காகவே கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் தடையாக உள்ளார்களா? என்கின்ற சந்தேகங்களும் எழுகின்றன. இவ்வாறான நில ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

இது தொடருமாயின் கட்டியெழுப்பப்பட வேண்டிய இரு இனங்களின் ஒற்றுமை சீர்குலையும் நிலைமையே உருவாகும் என இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்தினை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே முச்சக்கர வண்டியில் தென்னை ஓலைகளை ஏற்றி வந்து வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US