ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்த விசாரணைகளில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள், முன்னாள் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் சட்டவிரோதமான முறையில் குவித்த சொத்துக்களை தங்களது பெயர்களில் கொள்வனவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
வேறும் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சொத்துக் குவிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் விசாரணைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம். சந்திரசேன மற்றும் சாமர சம்பத் ஆகியோரிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் அரசியல்வாதிகள், முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் 26 பேர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்கள் வேறும் நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ள சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam