அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் – லக்ஸ்மன் பியதாச
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றிய இளைஞர்கள் மற்றும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
5000 ரூபா நிவாரணம் பணம் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் இதனால் பணவீக்கம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பொருட்களினதும் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் அரசாங்கம் சில பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிணை முறி வழக்கு குறித்து விசாரணை நடாத்தாது அரசாங்கம் ஏன் சந்தேக நபரை வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதித்துள்ளது என மக்கள் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதனால் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.