ஹிட்லராக மாறுவார் கோட்டா, இது அரசின் நிலைப்பாடல்ல! - கெஹலிய தெரிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை யேர்மனியின் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டு வெளியிட்ட கருத்து, அரசின் நிலைப்பாடல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராக மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"அது ஒரு இராஜாங்க அமைச்சரின் கருத்தே தவிர அரசின் கருத்தல்ல" என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்க முடியும் என்றும், அவற்றைப் பாரதூரமானதாக எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, "ஹிட்லர் எந்தவொரு அரசியல்வாதிக்கும் முன்மாதிரியானவர் அல்ல" என்று
இலங்கைக்கான யேர்மனி தூதுவர், இராஜாங்க அமைச்சரின் கருத்துக்குப்
பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.