எதிர்ப்புகளுக்கு தூபமிடாது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழையுங்கள்! அரசியல் கைதிகளின் உறவினர்கள்

Vavuniya Prisons in Sri Lanka
By Shan Nov 10, 2022 10:13 PM GMT
Report

 எதிர்ப்புகளுக்கு தூபமிடாது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழையுங்கள் என அரசியல் கைதிகளின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்களால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அலசரகால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பேன்றவற்றின் கீழ் 10 முதல் 27 ஆண்டுகளாக சிறைச்சாலைகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசு கரிசனை கொள்ள தொடங்கியுள்ளது.

இதனை ஐநா உட்பட அமெரிக்கா, மற்றும் ஐராப்பிய ஒன்றியமும் வரவேற்றுள்ளது. இன்னும் பல சர்வதேச மனிதநேய அமைப்புகள் ஊக்கப்படுத்தியுள்ளன.

இவ்வாறிருக்க, கைதிகள் விடயம் கையாளப்படுவதற்கு எமது அழுத்தங்கள் தான் காரணமென தமிழ் அரசியல் தரப்புகள் பொதுவாக பேசிக்கொள்கின்றனர்.

புலம்பெயர் அமைப்புகளும் தமது செக்மேற் தான் வேலை செய்கிறது என சொல்கிறார்கள். ஐநாவினதும் மேற்குலகினதும் தீண்டுதலே அரசை செயலாற்றும் பரப்புக்கு இட்டு சென்றுள்ளது என ஜெனீவா சென்று திரும்பும் தரப்பு சான்று பகிர்கிறது.

எது எவ்வாறு இருப்பினும், யார் குற்றியென்றாலும் அரசியானால் போதுமென்று பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிகள் விடுதலையை அவாவி நிற்கின்றார்கள்.

குரவற்றவர்களின் குரல் அமைப்பு கொடுஞ்சிறை அனுபவித்து கொண்டிருப்போரின் அசல் அடையாளமாக, நடைமுறை சாத்தியமான வழிகளில் எல்லாம் முயற்சித்து குரலுயர்த்தி செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இங்கு, அரசியல் கைதிகள் மீதான அரசின் கரிசனையை, அரசியல் தேவைக்கானதென்றோ. அழுத்தத்தினால் தானென்றோ யாரும் ஆராய்ந்து கொண்டிக்க வேண்டியதில்லை.

எதிர்ப்புகளுக்கு தூபமிடாது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஒத்துழையுங்கள்! அரசியல் கைதிகளின் உறவினர்கள் | Political Prisoners Sri Lanka

மாறாக இந்த மனிதாபிமான பணியை இதற்கு மேலும் அர்த்தப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று சுமார் நாற்பதுக்கும் குறைவான மீதமுள்ள அரசியற் கைதிகளையும் சிறைமீட்க தம்மாலான ஒத்துழைப்புகளை நல்குவதே தர்மமாகும்.

நீண்ட நெடுஞ்சிறை இருக்கும் இந்த அடகு வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளின் உயிர்ப்புடனான சிறை மீழ்விற்கு இனம், மதம், மொழி, கட்சி, கொள்கை, கோட்பாடு தாண்டி சிந்தித்து கரமசைக்க முடியுமானால் அதுவே மெய்யான மனித நேயமாக இருக்கமுடியும்.

காலம் காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வகை வேறுபடுத்தாது பொது அரசியல் தீர்மானமொன்றினை மேற்கொண்டு அவர்கள் தம் குடும்ப உறவுகளுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பமளிக்க வேண்டும்.

இந்த மனிதாபிமான அறைகூவலை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கும், தனிப்பட்ட முறையிலும் பொதுவெளி வேண்டுகைகள் மூலமாகவும் தமிழ் அரசியல் கைதிகள் பலதடவைகள்.

வலியுறுத்தி வந்துள்ளார்கள். ஆனபோதும், இதுவரை அவர்கள் கூட்டான ஒரு தீர்மானத்துடன் அரசை அணுகி பேச்சு மேசையொன்றை கோரியிருக்கவில்லை.

போனது போகட்டும், இப்போதும் கூட காலம் குணங்கெட்டுவிடவில்லை. அவசரம் தீர்க்கப்பட வேண்டிய ஒவ்வொரு வேலைத்திட்டங்களுக்கேனும் பலமான ஒற்றுமை சக்தியாக வெளிப்பட்டு அரசிடம் சென்று உயர்மட்ட பேச்சுக்களுக்கு வற்புறுத்துங்கள்.

நிச்சயமாக நற் பெறுப்பேறுகள் கை கூடிவரலாம். தற்போது சிறையிலுள்ளவர்கள் எவரும் ஆயுதப் போராட்டத்திற்கு நாமமிட்டவர்கள் அல்லர்.

மாறாக, கருவிகளாக பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள் என்பதை புரிந்துகொண்டு இவ்வாறானவர்களின் துயரத்தை வைத்து ஆதாயம் தேடாது சிறை மீள கரம் கோர்த்து செயலாற்ற வேண்டும்.

இங்கே பிரதானமாக புலம்பெயர் தமிழ் மக்களும், முதலீட்டாளர்களும், அமைப்புகளும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் கன்னை பிரிந்து நின்று கருமமாற்ற முயலாது, பொருளாதார நலிவு கண்டு இடர்படுகின்ற இலங்கை தேசத்திற்கு ஒருமித்த ஒரே கருத்தாக இந்த மனிதநேய விடுதலை விவகாரத்தை முன்னிறுத்தி, ஒன்றுபட்ட இலங்கை மக்களாக தேசத்தை கட்டியைழுப்புவதற்கு நல்லிணக்கப் புள்ளியிடுமாறு கோர முடியும்.

நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு தமிழ் அரசியல் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். அதற்கடுத்து வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதினாறு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதற்கட்டமாக எட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அதுமட்டுமல்ல, எதிர்வரும் தைப்பொங்கல் தினப் பாண்டிகைக்கு முன்னதாக மேலும் ஒரு தொகுதி அரசியற்கைதிகளுக்கு பொதுன்னிப்பு வழங்கவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.

எனவே, அரசியல் கைதிகளது விடுதலை விடயத்திற்கு முழுமையான தீர்வுகான இது முக்கியமான காலமாகும் என்பதை கவனத்திற் கொண்டு எதிர்ப்புகளுக்கு தூபமிடாத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும் என்ற விடயத்தை கோடிட்டு கூற கடமைப்படுகிறோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US