அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அடிப்படை பணிகள் ஆரம்பம்:விக்னேஸ்வரனிடம் கூறிய நீதியமைச்சர்
சிறிய குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வீ.விக்னேஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சிறை கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருப்பதாக அமைச்சர் தன்னிடம் கூறியதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட போகும் பாரதூரமான அறிக்கை

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட உள்ள அறிக்கை மிகவும் பாரதூரமான ஒன்று.
அந்த அறிக்கை வெளியிடப்படும் முன்னர்?ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக உறுதியளித்த ஜனாதிபதி

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் வடக்கு, கிழக்கில் நடக்கும் காணி ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
அத்துடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்துச் செய்யவும் ஜனாதிபதி இணங்கினார் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri