அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைக்குள் இருப்பது பயங்கரவாத தடை சட்டமா? அல்லது பாதுகாப்பு துறையினரின் தீவிர இனவாத நோக்கமா?

Police Army Sri Lanka Court Terrorism Act Political prisoners
By Independent Writer Jan 10, 2022 09:39 AM GMT
Report

அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறைக்குள் தள்ளி அவர்கள் வாழ்வை பறித்து அழித்தது பயங்கரவாத தடை சட்டமா? அல்லது பாதுகாப்பு துறையினரின் தீவிர இனவாத நோக்கமா? என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ,வெள்ளை மற்றும் கறுப்பு இன மக்களுக்கு இடையில் சமாதானத்தையும், பாதிக்கப்பட்ட கறுப்பு இனத்தவருக்கு அரசியல் நீதியையும், இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த உழைத்து வெற்றி கண்ட பேராயர் டெஸ்மன்ட் டுட்டு அவர்களின் இறுதி மரணச்சடங்கு பிறந்திருக்கும் புது வருடத்தின் முதல் நாளில் நடந்திருக்கிறது.

அவர் சர்வதேசத்துக்கும் விட்டு சென்ற நல்லிணக்க செயற்பாடு புதைக்கக் கூடாது. அது தொடர்வதற்கான செயற்பாட்டில் இலங்கை ஆட்சியாளர்கள் நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அவருக்கு செய்கின்ற கௌரவமாக அமைவதோடு அரசியல் நீதியை தேடிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அரசியல் தீர்வுக்காக சர்வதேசத்தை நோக்கி தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அன்னிய செலவாணி பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்பன முழு நாட்டையும் பயத்திற்குள் தள்ளி இருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் வெளி சக்திகள் நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் நிலை உருவாகலாம். அத்தகைய ஆபத்தும் உள்ளது.

இந்நிலையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் மக்களுக்கு நாட்டின் மீது நம்பிக்கையை துளிர்விட செய்யவும் மக்கள் சக்தியை பலமடைய செய்வதன் அடையாளமாகவும் நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை பிறந்திருக்கும் புது வருடத்தில் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காக பல்வேறு காலகட்டங்களில் அடையாள உண்ணா விரதத்தை ஆரம்பித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்திய போதும் அவர்களுக்கு அரசியல்வாதிகளாலும் ஆட்சி தரப்பினராலும் விடுதலை தொடர்பில் கொடுக்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

அரச தரப்பினரால் அரசியல் கைதிகளின் விபரங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் திரட்டப்பட்ட போதும் விடுதலை இன்னும் கைகூடவில்லை என்பது வேதனைக்குரியது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விடவும் அதிக காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்து தங்கள் வாழ்வை இழந்து விட்டனர்.

அத்தோடு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கின்றனர். இது நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை தீர்ப்பை விட பாரிய தண்டனையாகும். இத்தகைய தண்டனையை இவர்கள் தொடர்ந்தும் அனுபவிக்க இடம் கொடுப்பது அடிப்படை மனித உரிமை மீறும் செயலாகும் என்பதால் இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அரசியல் நீதியை எதிர்பார்த்து இருக்கும் மக்களின் அபிலாசையாகும்.

மேலும் நீண்ட காலம் சிறையில் வாழ்வதைவிட தண்டனையை அனுபவித்து குறுகிய காலத்தில் குடும்பத்தோடு கொண்டு சேரலாம் என்ற நோக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை பலவந்தமாக ஏற்றுக் கொண்ட அரசியல் கைதிகளும் உண்டு.

இத்தகைய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைமை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தோடு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் எந்தவித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையிலும், குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நீண்டகாலமாக சிறைக்குள் தள்ளி அவர்கள் வாழ்வை பறித்து அழித்தது பயங்கரவாத தடை சட்டமா? அல்லது பாதுகாப்பு துறையினரின் தீவிர இனவாத நோக்கமா? இந்நிலையில் சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்பகொடூர பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றி பாதிக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க புது வருடத்தில் இவர்களை விடுதலை செய்வதற்கு ஆட்சியாளர்கள் வழிவகுக்க வேண்டும். அரசியல் கைதிகளின் குடும்பத்தினர் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் குடும்பத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் நீண்ட காலம் சிறையில் தடுத்து வைத்திருப்பது குற்றச் செயலாகவே நாம் பார்க்கிறோம். அவரின் குடும்பங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இருந்து மீட்சி அளிக்கவும் இன நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் கருதிக்கொண்டு அனைத்து அரசியல் கைதிகளையும் பிறந்திருக்கும் புதுவருடத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.            

10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US