சாந்தன் நாடு திரும்ப அனுமதியுங்கள்: ரணிலுக்குத் தாயார் கடிதம் (Photos)
சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தை அவர் வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சிடமும் இதே கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
நாடு திரும்ப அனுமதிக்க கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உள்ளிட்டவர்களை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்தது.
இதில், இலங்கையர்களான சாந்தன், முருகன், றொபேர்ட்ஸ, ஜெயக்குமார் ஆகிய நால்வர் திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே, தனது மகன் தாய்நாடு திரும்புவதற்கு வழிவகை செய்யுமாறும், அவரை நாடு திரும்ப அனுமதிக்குமாறும் கோரி சாந்தனின் தாயார் ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



