நுவரெலியாவில் திடீரென ஒன்றுக்கூடிய அரசியல்வாதிகள்! அறையில் சிக்கிய ஆபத்தான பொருள்
கடந்த 28ஆம் திகதி இரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக நுவரெலியாவில் அமைந்துள்ள விடுதியொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தமொன்று பதிவாகியுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட அவர்களுடன் வந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினருக்கு விருந்தொன்று இடம்பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
கடந்த 28 ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும், மறுநாள் 29ம் திகதி, விடுதியை சுத்தம் செய்யும் போது, இரண்டு வெற்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தலைமையக பொலிஸ் அதிகாரிகள் விசாரணை
இது தொடர்பில் நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்றும் உயர் பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயமோ, சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை எனவும் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நுவரெலியா தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
