தடுப்பூசி விநியோகத்தில் அரசியல் தலையீட்டுக்கு இடமளிக்கக் கூடாது! - ஜனாதிபதி பணிப்புரை
கோவிட் தடுப்பூசி விநியோகத்தின் போது அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் போது எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறாமல் இருப்பதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு, கம்பஹா போன்ற அதி உயர் ஆபத்துடைய பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது.
சுகாதார அதிகாரிகள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாது உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசி விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறான அரசியல் அழுத்தங்களை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இதுவரையில் அரசியல் தலையீடுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
