உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ராஜபக்ச அரசாங்கத்தின் ஊடாக நியாயம் கிடைக்குமென நம்பவில்லை - அரசியல் பார்வை
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தின் ஊடாக நியாயம் கிடைக்குமெனவும், உண்மை கண்டறியப்படும் எனவும் நம்பவில்லை எனக் கொழும்பு பேராயர் மல்கம் ரஞசித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் ஊடாக நீதித்துறையில் அவரால் எவ்வாறான விடயங்களிலும் தலையீடு செய்ய முடியுமெனவும், ஆகவே நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை தொகுப்பு,
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




