வவுனியாவில் வாக்குச்சீட்டை முகநூலில் பகிர்ந்த அரசியல் பிரமுகர் : எழுந்துள்ள சர்ச்சை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பிற்கான வவுனியா மாவட்ட நிதிப்பொறுப்பாளருமான ஒரு அரசியல் பிரமுகர் தனது முகநூலில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டை பொது வேட்பாளருக்கு புள்ளடி இடப்பட்டவாறு பகிர்ந்துள்ளார்.
நேற்றையதினம் (06) இரண்டாவது நாளாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நபர் வாக்குச் சீட்டை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ள செயல்பாடு என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக வவுனியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடமும் தேர்தல் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
மேலதிக தகவல் - ராகேஷ்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri