மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு புதிய நீதியரசர்கள் நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான கே.எம்.ஜி.எச்.குலதுங்க, டி.தோட்டவத்த, ஆர்.ஏ.ரணராஜா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி.கோபல்லவ ஆகியோருக்கு பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
107ஆவது பிரிவு
அதேவேளை, அரசியலமைப்பின் 107ஆவது பிரிவிற்கு அமைய இந்த நியமனங்களை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான்கு பேரின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்திருந்தார்.
அந்த பெயர்ப்பட்டியலில், மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான குலதுங்க, தோட்டவத்த மற்றும் ரணராஜா ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த வெற்றிடங்களுக்கு மேற்குறிப்பிட்ட நால்வருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam