அனோஜன் விவகாரம்! அவசரமாக சவூதி அரேபியா செல்லும் அரசியல் பிரதிநிதிகள் குழு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று விரைவில் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மேன்முறையீட்டு கடிதம் ஒன்றை சவூதி அரேபிய மன்னரிடம் சமர்ப்பிக்கும் நோக்கில் பயணிக்கவுள்ளது.
இந்த மேன்முறையீடு எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இந்த மேன்முறையீடு மனிதநேய அடிப்படையில் முன்வைக்கப்படவுள்ளது.
மேன்முறையீடு தாக்கல்
இதனிடையே,சிவராசா சார்பாக மேன்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்வதற்காக வெளிவிவகார அமைச்சு சவூதி அரேபியாவிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்றுடன் தொடர்புகொண்டுள்ளது.
இதேவேளை, சிவராசாவை விடுவிக்குமாறு பல சிவில் உரிமை அமைப்புகளும் மத அமைப்புகளும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
மேலும்,புலம்பெயர் அமைப்புகளும் தாங்கள் இயங்கும் நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, சிவராசாவை விடுவிப்பதற்கு இராஜதந்திர மற்றும் மனிதநேய ஆதரவை கோரி வருகின்றமை கறிப்பிடத்தக்கது.