பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு அரசியல் நெருக்கடி
பிரித்தானிய முன்னாள் தூதுவர் பீட்டர் மண்டெல்சனுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் பிரித்தானியாவில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பீட்டர் மண்டெல்சனின் பின்னணியை ஆய்வு செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு உயர்மட்ட பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு சோதனையின் போது அதிகாரிகள் இரண்டு முக்கிய இடங்களிலும் 'சிவப்பு பெட்டிகளை' அடையாளமிட்டுள்ளனர்.
எச்சரிக்கை
இது மிக உயர்ந்த அளவிலான கவலையை அதிகாரப்பூர்வமாக மறுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

இவ்வளவு தெளிவான எச்சரிக்கையும் மீறி அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மண்டெல்சனின் நியமனத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக பிரதமர் கீர் ஸ்டார்மர் இதற்கு முன்பு நாடாளுமன்றத்தில் உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் பாதுகாப்பு சோதனையில் தோல்வியடைந்தது தமக்கு இந்த வாரம் வரை தெரியாது என்று பிரதமர் தற்போது கூறி வருகிறார்.
நிர்வாகத் தோல்வி
ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில்தான் தமக்கு இது குறித்த முதல் தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு இந்த தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படாதது "திகைப்பூட்டுகிறது" என்றும், இது "மன்னிக்க முடியாத ஒரு தவறு" என்றும் பிரதமர் ஸ்டார்மர் சாடியுள்ளார்.
இருப்பினும், பிரதமரின் இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துள்ளன. அவர் நாடாளுமன்றத்தில் உண்மையைப் மறைத்துவிட்டார் என்றும், இது ஒரு மிகப்பெரிய நிர்வாகத் தோல்வி என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.