யாழில் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் விசாரணை நடத்த கோரிக்கை
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(07.08.2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணை
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதனைக் கருத்திற் கொண்டு நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளையை பிறப்பித்துள்ளது.
அதன்படி பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை செப்ரெம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அழைத்து அவர்களிடம் ஆரம்ப கட்டவிசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் அல்லைப்பிட்டி பகுதியில் ஹைஏஸ் வாகனம் ஒன்றை இடைமறித்துள்ளனர்.
எனினும், அந்த வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது. இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தை செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri