உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க அரசியல் சதி! கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை

Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Rakesh Jun 29, 2026 12:36 AM GMT
Report

க.பொ.த உயர்தரப் பரீட்சையானது ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியில், அரசியல் கட்சியொன்று தலையீடு செய்து மாணவர்களின் இந்தப் பரீட்சையை ஒத்திவைக்கத் திட்டம் தீட்டுகின்றது.

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 இல் பரீட்சையை ஆரம்பிக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழில் இதுவரை கண்டறியப்படாத மேலும் 2 மனிதப்புதைகுழிகள்! சிறையிலிருந்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சோமரத்ன ராஜபக்‌ஷ

யாழில் இதுவரை கண்டறியப்படாத மேலும் 2 மனிதப்புதைகுழிகள்! சிறையிலிருந்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சோமரத்ன ராஜபக்‌ஷ

உயர்தரப் பரீட்சை

அந்தச் சங்கத்தின் தலைவர் தம்மிக்க அழகப்பெரும இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க அரசியல் சதி! கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை | Political Conspiracy Postpone Alevel Examination

க.பொ.த உயர்தரப் பரீட்சையானது ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மிகத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற பின்னணியில், பெற்றோரின் அல்லது மாணவர்களின் அல்லது ஆசிரியர்களின் எவ்வித கோரிக்கைகளும் இன்றி, இதற்காக அரசியல் கட்சியொன்று தலையீடு செய்து பிள்ளைகளின் இந்தப் பரீட்சையை ஒத்திவைப்பதற்கோ அல்லது ஒரு வகையான செல்வாக்கு செலுத்தக்கூடிய செயன்முறைக்கோ பிரவேசித்துள்ளது.

பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ள தேசிய கல்வி நிறுவனம், இந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு 300 நாள்கள் போதுமானது என்பதை நேரடியாகவே பிரகடனப்படுத்தியிருக்கின்றது.

சிறைச்சாலைக்குள் இருந்து கஞ்சிபாணி இம்ரானுக்கு கமாண்டோ சலிந்த கடிதம்! பல ரகசியத் தகவல்கள் அம்பலம்

சிறைச்சாலைக்குள் இருந்து கஞ்சிபாணி இம்ரானுக்கு கமாண்டோ சலிந்த கடிதம்! பல ரகசியத் தகவல்கள் அம்பலம்

அரசியல் சதி

இவ்வாறானதொரு சூழ்நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக 300 நாள்களுக்கும் அதிகமானதொரு காலப்பகுதியை வழங்கிய பின்னரே இந்தப் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக மாணவர்களின் கல்வி மற்றும் அவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க அரசியல் சதி! கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை | Political Conspiracy Postpone Alevel Examination

பிள்ளைகளின் கல்வி சார்ந்து முன்னெடுக்கப்படும் இந்த இழிவான அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், தனியார் வகுப்புகளை நடத்துகின்ற ஆசிரியர்களுக்கு வணிக ரீதியான நோக்கங்கள் காணப்படுகின்றன. அவர்கள் தங்களது வணிக ரீதியான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இந்தப் பரீட்சையை ஒத்திவைக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடும் என நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆயினும், மாணவர்களின் கல்வி கற்கும் காலம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையினால், திட்டமிட்டபடி பரீட்சை மதிப்பீடுகளை முன்னெடுப்பது என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே பரீட்சைத் திணைக்களம் இருக்கின்றது.

சில வேளைகளில் இதற்கெதிராக வணிகத்தில் ஈடுபடும் ஒரு குழுவினர் செயற்படக்கூடும்.

சுப்பிரமணியன் நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை..!

சுப்பிரமணியன் நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை..!

கல்வி அமைச்சு

எவ்வாறாயினும், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியன சரியான நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பிள்ளைகளின் பரீட்சையைத் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி சரியாக நடத்த வேண்டும். மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வகையில் தற்போது முழுமையாகத் தயார்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க அரசியல் சதி! கல்வி அமைச்சிடம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை | Political Conspiracy Postpone Alevel Examination

மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் இதற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்து, தற்போது நீண்டகாலமாகத் தயாராகி உள்ளனர். எனவே, எவ்வித மாற்றமுமின்றி நியமிக்கப்பட்ட திகதியில் பரீட்சையை நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சையை எவ்வித தடையுமின்றி குறித்த திகதியிலேயே நடத்துவதற்கு கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியன தங்களின் சரியான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US