ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸாருக்கு வலைவீச்சு!
ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை நேற்று தெரிவித்தனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
பலர் கைது
ஏற்கனவே ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தமை, ஜனாதிபதி கொடியை விரிப்பாக பயன்படுத்தியமை போன்றவற்றுக்காக பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் போராட்டக்காரர்கள் ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்தவாறு புகைப்படங்களையும், காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள்
இதனை தவிர மேலும் சிலர் ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொன்மை வாய்ந்த பெருந்தொகையான பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கொடி, புகைப்படங்கள், நினைவுப்பரிசுகள், கலைப்பொருட்கள், வரலாற்று சிறப்புமிக்க புகைப்படங்கள், கொடியேற்றும் கம்பம் உட்பட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
அதேவேளை புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ கொடியை தடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
