பண்டிகைக் காலத்தில் அவதானம்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சமூக ஊடகங்களில் அதனை பதிவிட வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வெளியிடங்களுக்குச் சென்று அங்கிருந்து புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவது கொள்ளையர்களை ஊக்குவிப்பதாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் சிலர் பல்வேறு இடங்களுக்குச் சென்று விடுமுறைக்காலத்தை கழிப்பதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களை வெளிப்படுத்தும் விதமாக செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பயணங்கள் தொடர்பில் வெளிதரப்பினர் தெரிந்து கொள்வதனால் அவ்வாறானவர்களின் தங்க ஆபரணங்கள், பணம் போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு வெளியே செல்வதாக இருந்தால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சிவில் பாதுகாப்பு பிரதானிகளை அறிவிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 4 மணி நேரம் முன்
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan