இந்த எண்களில் அழைப்புக்கள் வந்தால் அவதானம்! பொதுமக்களுக்கு மீண்டும் பொலிஸார் எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு மோசடி மொபைல் செயலி தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்த ஒரு தொலைபேசி எண்ணை திருத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவின் முந்தைய அறிக்கையில் (D/Media/Out/649/2026) வாட்ஸ்அப் வழியாக "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்" என்ற பெயரை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியுடன் தொடர்புடைய எண்களில் 011‑7771979 என்ற எண்ணும் பட்டியலிடப்பட்டிருந்தது.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
எண் அறிக்கையிலிருந்து நீக்கம்
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட், 011‑7771979 என்பது தனது அதிகாரப்பூர்வமான, சட்டப்பூர்வமான தொடர்பு எண் என்று தெளிவுபடுத்தி, அந்த எண்ணை அறிக்கையிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளது.

விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப்பிரிவு சட்டப்பூர்வமான எண்ணை நீக்கிவிட்டு, தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த மோசடி குறித்து பொதுமக்களை மீண்டும் எச்சரித்துள்ளது.
குறித்த மோசடிக்காரர்கள்(srilankan[.]wuozgo[.]cc),(srilankan[.]vaco[.]cc), மற்றும் (srilankan[.]krgo[.]cc) ஆகிய மூன்று போலி இணையதளங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை
இந்தச்செயலியை நிறுவியவுடன், பணப்பரிமாற்றம் செய்வதற்காக ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTPs), வங்கிக் கணக்கு விபரங்கள் மற்றும் தரவுகள் திருடப்படுகின்றன.

இந்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய எண்கள் 077‑4558361 074‑1142208 077‑5791209 074‑3268200 தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர்களும் குழுக்களும் இதுபோன்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களைத் தொடர்ந்து சுரண்டி வருவதாகவும்,பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வெடித்துள்ள ஆர்ப்பாட்டம்! காங்கிரஸ் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் - மயிலாடுதுறையில் பரபரப்பு
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam