பொது மக்களுக்கு பொலிஸாரின் விசேட எச்சரிக்கை
புத்தாண்டு காலத்தில் ஆடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் போது அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிக்பொக்கெட் மற்றும் திருடர்களிடம் இருந்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பண்டிகை காலப்பகதியின் போது மக்களின் பாதுகாப்பு கருதி உடனடி நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வீதித்தடைகள், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடை உத்தியோகத்தர்களை அனுப்புதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கு போக்குவரத்து உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துதல் போன்ற விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam