இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்றைய தினம் கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு இணையத்தளம் ஊடாக பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெறுவது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறுந்தகவல் ஊடாகவும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் உங்கள் கையடக்க தொலைபேசி, வட்ஸ்அப், வைபர் பேஸ்புக் ஊடாக ஒரு தகவல் கிடைக்ககூடும். உங்களுக்கு உங்கள் காதலன் அல்லது காதலி பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டு அந்த குறுந்தகவல் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
அதற்கான பரிசு புகைப்படம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.
அதில் காதலன் அல்லது காதலிக்கு தொடர்புடைய புகைப்படங்களும் இருக்கலாம்.
அதற்காக ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை நம்பி பணம் வைப்பிலிட வேண்டாம் என இலங்கை இளைஞர் யுவதிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri