இவ்வார விடுமுறை நாட்கள் தொடர்பில் சுகாதார பிரிவு, பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்வரும் வெள்ளிக்கிழமை போயா விடுமுறையை அடுத்துவரும் நாட்கள் சனி, ஞாயிறு என்பதனால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களின் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வார இறுதி விடுமுறையின் போது பல்வேறு சுற்றுலா, விருந்து பல்வேறு இடங்களில் மக்கள் ஒன்றுகூடும் போது சுகாதார ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த வார இறுதி நாட்கள் அச்சுறுத்தலான வார இறுதி நாட்களாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார். இதனால் வேகமாக கொரோனா பரவக்கூடும் என்பதனால் அவதானமாக செயற்படுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முடிந்தளவு ஒன்றுகூடுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர வேறு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் சென்றால் கூட யாரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவும் என தெரியாதென்பதனால் தயவுசெய்து பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri