அநுர அரசின் அதிரடி - வெளிநாட்டில் சுற்றிவளைக்கப்படும் மற்றுமொரு குழு - கலக்கத்தில் 25 பேர்
அநுர அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையால் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த சுமார் 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்டர்போல் அதிகாரிகள் இலங்கை பொலிஸாருக்கு உதவிவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பதுங்கியுள்ள குற்றவாளிகள்
இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டுபாய் மற்றும் இந்தியாவில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகள் தங்கள் இருப்பிடங்களை மாற்றத் தொடங்கியுள்ளனர்.
எனினும், அவர்கள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க இன்டர்போல் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாருக்கு மிகவும் அவசியமாக உள்ள 25 குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
புலனாய்வு துறை
இலங்கை புலனாய்வு துறையின் நேர்த்தியான செயற்பாடு காரணமாக, வெளிநாடுகளில் பதுங்கியிருந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 18 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதாள உலகக்குழு மற்றும் போதைப்பொருள் வலையமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam
