யாழில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸாரை வீதியில் வைத்து இருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை(28.04.2023) வீதி போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸாரை கிறீஸ் கத்தியை காண்பித்து அச்சுறுத்திய இருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பித்துள்ளனர்.
வீதி போக்குவரத்து ஒழுங்கு பணி
வீதி போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸார், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கு கிறீஸ் கத்தியை காண்பித்த அவர்கள் மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை என்பவற்றைக் கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்கள் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை
இந்நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றை மீட்ட பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
மேலும் மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் பாரப்படுத்ததாது வெளியில் எடுப்பதற்கு பல மட்டங்கள் ஊடாக முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
