உண்மையை கண்டறிவதற்கு பதிலாக கதை ஒன்றை சோடிக்கும் இலங்கை பொலிஸ் - பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை (Video)
கொழும்பு - பொறளை பிரதேசத்தில் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் இலங்கை பொலிஸ் உண்மையை கண்டறிவதற்கான சரியான திசையில் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பொலிஸார் சிசிரிவி முழுமையாக பார்வையிடாமல் சில பகுதிகளை மாத்திரம் பார்த்துவிட்டு அதன் அடிப்படையில் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளதாகவும், இது உண்மையை கண்டறிவதற்கு பதிலாக கதை ஒன்றை சோடிக்கும் முயற்சி எனவும் அவர் குற்றஞசாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராயர், குண்டு காலை வேளையிலேயே தேவாலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிசிரிவி காணொளிக் காட்சிகளை முழுமையாக பார்த்தால் அதனை புரிந்துகொள்ள முடியுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri