அசாத் சாலியின் கருத்து தொடர்பில் விசாரிக்க பொலிஸ் குழு நியமிப்பு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சநதிப்பில் வெளியிட்ட கருத்து காரணமாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தக் கூடும் எனக் கூறி குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கு அமைய அந்த முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் 5 பேர் கொண்ட பொலிஸார் இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இதனிடையே அசாத் சாலி, நேற்றைய தினம், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது கருத்து சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளார்.