வாடகைக் குடியிருப்பாளர்களை இலக்கு வைக்கும் பொலிஸார்! தீவிரமாக தகவல் சேகரிப்பு
நாடளாவிய ரீதியில் வாடகை குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து, குற்றச் செயல்களுடன் தொடர்புகளைக்கண்டறிய தீவிர பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 178,613 பேர் குறித்த விபரங்களை பொலிசார் முதற்கட்டமாக திரட்டியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 37,183 குடும்பங்களைச் சேர்ந்த 112,963 நபர்கள் வாடகை வீடுகளிலும் 10,755 குடும்பங்களைச் சேர்ந்த 34,133 நபர்கள் வாடகை அறைகளிலும் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல்வேறு வகையான குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் நபர்கள் வாடகை வீடுகளில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றதாக தெரியவந்துள்ளது.
அதனையடுத்தே, இவ்வாறு வாடகை வீடுகளில் தங்கி இருப்பவர்கள் பற்றிய விபரங்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri