மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த பொலிஸார்
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பிலும் ஐந்தாவது நாளாக இன்று தொடர்ந்து வருகின்றது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களின் ஒருவரான எஸ்.சிவயோகநாதன் தலைமையில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சர்வமத தலைவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது ஆலய முன்றிலில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமானதுடன் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு பலக்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.
இன்று தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதாகவும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் இந்த நாட்டில் மேலும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையுள்ளதாகவும், அதன் காரணமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்ந்து முடிவினை எடுக்க வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று மட்டக்களப்பு பொலிஸார் வருகை தந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை குறிப்பாக பெண்களையும் அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்ததன் காரணமாக சிறுவாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan