வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை

Vavuniya Journalists In Sri Lanka Northern Province of Sri Lanka
By Shan Jul 20, 2026 04:37 AM GMT
Report

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளரினால்  மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை நெளுக்குளம் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் நிதி வீண் விரயம் செய்யப்படுகின்றமை தொடர்பாக தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்ததற்காக, தவிசாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், 21.07.2026ஆம் திகதி நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளர் ஒருவருக்கு உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

தங்க நகைகளை அடகு வைக்க குவியும் இலங்கையர்கள்..! ஏற்பட்டுள்ள வரலாறு காணாத நெருக்கடி நிலை

பொலிஸார் மூலம் நடவடிக்கை

பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, உண்மைகளை ஆவணங்களுடன் வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக, தவிசாளர் பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்க முயல்வது ஊடகங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை | Police Summons Journalist In Vavuniya

தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகவியலாளர்களின் குரலை ஒடுக்க நினைக்கும் இச்செயல் வவுனியா அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் சபை நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஊடகவியலாளர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் பெறப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணங்களின்படி, 

1. பகிரங்க டெண்டர் இன்றி ஆயுட்கால சிசிடிவி (CCTV) ஒப்பந்தம்!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் எவ்வித பகிரங்க பத்திரிகை விளம்பரங்களோ அல்லது திறந்த கேள்வி கோரல்களோ (Tenders) இன்றி, முற்றிலும் வாடகை அடிப்படையில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

ஒப்பந்த விபரம்: சபைக்குட்பட்ட முக்கிய 25 இடங்களில், ஒரு இடத்திற்கு தலா இரண்டு கேமராக்கள் வீதம் மொத்தம் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆயுட்கால ஒப்பந்தம்: இத்திட்டமானது ஆயுட்காலம் வரை (Lifetime Contract) என்ற நீண்டகால ஒப்பந்த அடிப்படையில், கொடிகாமம் மீசாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த 'Microwin Hi-End (Pvt) Ltd' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

வாடகை மற்றும் இணையக் கட்டணம்

விதிமுறை மீறல்: பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள போதிலும், இத்திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை.

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை | Police Summons Journalist In Vavuniya

நிதி விரயம்: ஒரு கேமராவுக்கான வாடகை மற்றும் இணையக் கட்டணம் உள்ளடங்கலாக 2,758 ரூபா வீதம், 50 கேமராக்களுக்கும் சேர்த்து மாதாந்த வாடகை கட்டணமாக மொத்தம் 1,37,900 ரூபா சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் கேள்வி: தற்போது சந்தையில் சாதாரண ஒரு சிசிடிவி கேமராவின் விலை 30,000 ரூபா முதல் 35,000 ரூபா வரை விற்கப்படுகிறது.

இந்த மாதாந்த வாடகைத் தொகையைக் கொண்டு, மாதமொன்றுக்கு தலா 4 புதிய கேமராக்கள் வீதம் சபை நிதியிலேயே வாங்கியிருக்க முடியும்.

சில மாதங்களிலேயே அவை சபையின் சொந்த சொத்தாக மாறியிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் மக்கள் பணம் வாடகை என்ற பெயரில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படுகின்றது.

2. தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதத்தில் 17 இலட்சம் காலி!

சபையிடம் ஏற்கனவே போதுமான வாகன வசதிகள் இருக்கும் போது, தற்போதைய தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளார்.

ஏற்கனவே உள்ள வாகனங்கள்: அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு 'சிங்கிள் கப்' (Single Cab) வாகனமும், ஒரு முச்சக்கர வண்டியும் உள்ளன.

இது தவிர அரசாங்க அதிபரினால் மற்றுமொரு 'டபிள் கப் பிக்கப்' (Double Cab Pickup) வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய சொகுசு வாகன ஒப்பந்தம்: இவ்வாறான நிலையில், புதிய டொயோட்டா பிக்கப் வாகனம் ஒன்றை மாதாந்த வாடகை 3,40,000 ரூபா (3000 கிலோமீட்டர் வரை) என்ற அடிப்படையில் ஓராண்டு காலப்பகுதிக்கு (2025.11.13 முதல் 2026.11.12 வரை) வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் மேலதிகக் கட்டணமாகும். செலவிடப்பட்ட தொகை: கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்த வாடகை வாகனத்திற்காக 17,24,750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த வாகன வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும் பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

"அடிப்படைத் தேவைகளான வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று கூறும் சபை, தவிசாளரின் தனிப்பட்ட தேவைக்கு மட்டும் மக்கள் பணத்தை வாரி இறைப்பது மக்கள் பணத்தினை விரயமாக்கும் செயல் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் தொடரூந்தில் பாய்ந்த இளைஞன் பலி

கொழும்பில் தொடரூந்தில் பாய்ந்த இளைஞன் பலி

உத்தியோகபூர்வ கடிதம்

3. வடமாகாண ஆளுநர் செயலகம் அதிரடி விசாரணைக்கு உத்தரவு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மக்கள் நிதி பாரியளவில் விரயம் செய்யப்படுவதாகவும், பல்வேறு நிர்வாக முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் ஆதாரங்களுடன் வடமாகாண ஆளுநருக்குப் முறைப்பாட்டு கடிதம் அனுப்பியிருந்தனர்.

வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பொலிஸார் அழைப்பாணை | Police Summons Journalist In Vavuniya

இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, ஆளுநர் செயலகம் உடனடியாகச் செயற்பட்டுள்ளது.

இதன்படி, 2026.05.29 அன்று ஆளுநர் செயலகத்தினால் (கடித இலக்கம்: G/NPC/A4/LG/COM/VA/26/A/15) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உடனடியாக முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு, பொருத்தமான சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றினை மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய ஊடகவியலாளரின் ஊடக சுதந்திரத்தினை முடக்கும் வகையிலேயே தவிசாளரின் இவ் நடவடிக்கை அமைந்துள்ளது

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

தொடரும் சர்ச்சைக்குரிய மரணங்கள்: FBI உதவியை நாடுமாறு மொட்டுக்கட்சி கோரிக்கை

கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்

கோர விபத்தில் 2 இளைஞர்கள் பலி - ஆபத்தான நிலையில் மேலும் இருவர்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US