கொழும்பில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார் - அதிரடி சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள்
மருதானை, தெமட்டகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தினால் நேற்று இரவு 8.00 மணி முதல் 10.00 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 பிடியாணை பிறக்கப்பட்ட சந்தேக நபர்கள், 01 கிராம் மற்றும் 860 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த 08 சந்தேகநபர்கள் மற்றும் 155 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களும் குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 04 கிராம் கஞ்சாவை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களும், கஞ்சாவுடன் கலக்கப்பட்ட 02 கிலோ 72 கிராம் மாவா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாவத்தை, மருதானை மற்றும் மட்டக்குளிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். சந்தேகநபர்கள் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam