திருகோணமலையில் மனுவை ஒப்படைக்கச்சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்
திருகோணமலையில் மனு கடிதத்தை ஒப்படைக்கச் சென்ற ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாருக்கும்- கோரிக்கைகளை எடுத்துச் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இன்று (22.01.2024) ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மனு கடிதத்தை எடுத்துச்சென்ற போது ஆளுநர் அலுவலகத்தின் பிரதான கதவை பொலிஸார் மூடியமையினால் இரு சாராருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து தங்களுக்கு பொதுமக்கள் தினத்தில் ஆளுநர் அலுவலகத்திற்குள் உள் நுழைய வேண்டாம் எனக் கூறுவது பொருத்தமற்றது எனவும் தங்களுக்கு தீர்வினை உடனடியாக பெற்றுத் தருமாறும் இல்லாவிட்டால் போராட்டங்கள் முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் ஆளுநர் செயலகத்துக்கு வரவழைக்கப்பட்டு மனுவை பரிசீலனை செய்ய வரை கால அவகாசம் வழங்குமாறு கூறியமையினால் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இருந்த போதிலும் நாளையதினம் சிறந்த தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாக
போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர்
தெரிவித்துள்ளனர்.

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
