யாழில் பொலிஸ் காவலரண் அடையாளம் தெரியாத நபர்களால் உடைப்பு
யாழ்.பண்ணை நாக பூசணி அம்மன் சிலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட தற்காலிக
பொலிஸ் காவலரண் அடையாளம் தெரியாத நபர்களால்
உடைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.05.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இது குறித்த தெரியவருவதாவது, யாழ்.பண்ணை நாக பூசணி அம்மன் சிலை குறித்த இடத்தில் வைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
பொலிஸாரின் மேலதிக விசாரணை
இதற்கமைய குறித்த சிலையின் பாதுகாப்புக்காக தற்காலிகக் கூடாரம் அமைத்து பொலிஸார் தங்கியிருந்துள்ளனர்.
மேலும், வழக்கு விசாரணைகள் நிறைவுற்றதுடன் பொலிஸார் அவ்விடத்தில் இருந்து சென்றதையடுத்து தற்காலிகக் கூடாரம் அகற்றப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸ் காவலரண் அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
