கொழும்பில் பொலிஸார் விசேட நடவடிக்கை! ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் நகரத்தில் சுற்றித் திரிந்தவர்களைக் கைது செய்ய கொழும்பில் நேற்று சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு டேம் வீதியில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போது சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
. இதன்படி, சுகாதார அறிவுறுத்தல்களின்படி முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில், நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், நேற்றைய தினம் கொழும்பில் இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri