பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: அம்பாறையில் சம்பவம்
அம்பாறை - தீகவாபி பிரதான வீதியில் மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தீகவாபி பிரதான வீதியில் சேவையில் இருந்த பொலிஸாரின் உத்தரவை மீறி ஓடிய மோட்டார் சைக்கிள் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
தீகவாபியில் இருந்து எரகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை மாணிக்கம்மதுவ பாலத்திற்கு அருகில் நிறுத்துமாறு பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் உத்தரவிட்ட போதும் அவர்கள் தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற பொலிஸார் இரு தடவைகள் அவர்களுக்கு மேலும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் போது அவர்கள் ஓட முற்பட்ட போது பின் இருக்கையில் பயணித்தவரின் வலது காலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதோடு அம்பாறை பொலிஸ் அத்தியட்சகரிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
