விசர் நாயை துப்பாக்கியால் சுட்ட பொலிசார்! பார்த்துக்கொண்டு நின்ற நபர் காயம்
களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் விசர் பிடித்த நாயை துப்பாக்கியால் சுடும்போது, அங்கிருந்த நபரொருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
குறித்த நாய் அப்பகுதியில் சுமார் 10 பேரை நாய் கடித்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 10.30 மணியளவில் களுத்துறை தெற்கு வெட்டுமகட பகுதியில் குறித்த விசர் நாய் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் சம்பவ இடத்திலேயே நாய் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் அருகில் இருந்த 60 வயது முதியவர் ஒருவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் களுத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan