அமெரிக்க பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி கறுப்பின இளைஞரொருவர் பலி!
அமெரிக்காவில் கறுப்பின வாலிபர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் Minneapolis நகரில் அமீர் லோக்கி (22) என்ற கறுப்பின நபரே இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
அமெரிக்காவில் St.paul நகரில், நடந்த கொலை தொடர்பில் குற்றவாளியை தேடிக்கொண்டு இருந்த Minneapolis பகுதி பொலிஸார் தவறுதலாக அமீர் லோக்கி (22) அவரின் அறைக்குள் நுழைந்து சரணடையுமாறு கூறியுள்ளனர்.
இதன்போது போர்வைக்குள் உறங்கிக்கொண்டிருந்த அமீர் லோக்கி (22) திடீரென தன் முன் துப்பாக்கிகள் இருப்பதை பார்த்து பதறி அவரது கைத்துப்பாக்கியை எடுக்க முற்பட்டபோது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்த காட்சிகள் பொலிஸார் சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் கமராவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை தற்போது பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதற்கு அமெரிக்கா துப்பாக்கி உரிமையாளர்கள் குழு கண்டம் தெரிவித்துள்ளதுடன்,மக்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.