காணொளி ஊடாக உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Aanadhi Jun 24, 2023 02:06 AM GMT
Report

சமூகவலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்டு உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் மூன்று காணொளிகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

கடந்த 17, 18, 20 ஆகிய மூன்று நாட்களுக்குள் பொலிஸ் சீருடை அணிந்து, பொலிஸ் உயர்அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி கொள்ளும் வகையிலும், இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பணி இடை நீக்கம் 

காணொளி ஊடாக உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம் | Police Sergeant Self Video Viral Sri Lanka Police

ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு தெற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் பொலிஸ் சார்ஜன்ட் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், தான் ஒரு மனிதாபிமானம் மிக்க பொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டே காணொளிகளில் பொலிஸாரை குற்றம் சுமத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொலிஸ் மா அதிபரின் குறைகேள் அறைக்குச் சென்றபோது, ​​சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசியதற்குக் கோபமடைந்ததாகவும், சிங்களத்தில் பேசுமாறு உத்தரவிட்டதாகவும் இந்த சார்ஜன்ட் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் பதவி உயர்வு 

காணொளி ஊடாக உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம் | Police Sergeant Self Video Viral Sri Lanka Police

அவரது காணொளியில் அடங்கியிருந்த கருத்துக்கள் பின்வருமாறு,

உயர் பொலிஸ் அதிகாரிகளை மகிழ்விக்கும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.

பொலிஸ் திணைக்களத்தில் பதவி உயர்வு வழங்குவதற்கு முறையான முறைமை இல்லை.

2008 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது மடிக்கணினி கொண்டு வருமாறு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

மடிக்கணனி கொண்டுவரவிட்டால் கடமை விடுப்பு விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறினார். பின் மடிக்கணினி கொண்டு வருவதாக உறுதியளித்த பின்னரே எனக்கு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எட்டுப் பாராட்டுப் பத்திரம் 

காணொளி ஊடாக உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம் | Police Sergeant Self Video Viral Sri Lanka Police

மடிக்கணினி கொண்டு வர முடியாமல் போனதன் காரணமாக, ஒரு வருடத்திற்குள் என்னை 18 காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து அந்த அதிகாரி பழிவாங்கினார்.

பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து முப்பத்தொரு வருடங்கள் சேவையாற்றியதோடு பொலிஸ் மா அதிபரிடமிருந்து எட்டுப் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருதுகளையும் பெற்றுள்ளேன்.

இந்தக் காணொளிகள் வெளியானதன் பின்னர் ஏற்படக்கூடிய எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். என அவர் தனது காணொளிகளில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த சார்ஜன்ட் வெளியிட்ட காணொளிகள் , சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் இந்தக் காணொளிகளை பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்தே பொலிஸ் சார்ஜண்ட் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனையடுத்து இந்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US