குருணாகலையில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
குருணாகல் - பொத்துஹெர பொலிஸ் நிலையத்தில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் சார்ஜன்ட் 5,000 ரூபாவை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கை
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்துள்ள நபரிடம் விபரங்களை உள்ளடக்காமல் பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காகவே இந்த இலஞ்ச தொகை கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் பொத்துஹெர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இலஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபரான பொலிஸ் சார்ஜன்ட் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
