பெண்ணின் கழுத்தை அறுத்த ஆபத்தான நபர் - தீவிர தேடுதலில் பொலிஸார்
குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மத்துகம பொலிஸ் பிரிவின் தொலஹேன வத்த பகுதியில் ஏப்ரல் 18 ஆம் திகதி கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்ததாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்துகம அகலவத்தையை சேர்ந்த சந்தேக நபர், அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிர தேடுதலில் பொலிஸார்
41 வயதான சனத் ரவீந்திர நிலந்த என்ற நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் வாயிலாக பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718591700 மற்றும் 071 8591701 என்ற தொலைபேசி எண்களில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது.



