பாழடைந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி!பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்(VIDEO)
தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகங்கை எல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கு தம்புள்ளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில், பிரதான சந்தேக நபராக கருதப்படும் விக்ரமசிங்க ஆரச்சிலாகே சுமேத வசந்த அல்லது பஹன் எனும் நபரே பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குருணாகல், மங்குலாகம, தொரட்டியாகெதர பகுதியை சேர்ந்த சந்தேக நபர், 35 வயதானவர் எனவும் 862495098 V எனும் தேசிய அடையாள அட்டையைக் கொன்டவர் எனவும் குறிப்பிடும் பொலிஸ் தலைமையகம் , அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு அவரைக் கைது செய்ய உதவுமாறு பொது மக்களை கோரியுள்ளது.
மேலும் இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். OIC - தம்புள்ளை - 071-8591091 OIC - குற்றப் பிரிவு - 071-8593103
தம்புள்ளை - அத்துபாரயாய பகுதியைச் சேர்ந்த 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
