தேசபந்து தொடர்பில் வெளிவரும் தகவல்கள்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu Tennakoon) கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும், தேசபந்து தென்னக்கோன் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் இதுவரை நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
209வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை
தேசபந்து தென்னக்கோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன், தேசபந்து தென்னக்கோனை கைது செய்வதற்கான, பிடியாணை இருக்கின்ற நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உதவும் எந்தவொரு நபரும் தண்டனைச் சட்டத்தின் 209வது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்கப்படாது, மற்ற சந்தேக நபர்களைப் போலவே நடத்தப்படுவார் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
