இவரை தெரியுமா..! பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
பொது மக்களிடம் கோரிக்கை
இவ்விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, குற்றச் செயலுக்காக வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று AI தொழிநுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 071-8596408 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri