மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் கோரிக்கை
மட்டக்களப்பில் வாவியில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
சிவப்பு நிற ஆடை..
குறித்த சடலம் கடந்த 19ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டு அடையாளம் காணப்படாமல் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயதுடையவர் எனவும் சிவப்பு நிறத்திலான சேட் மற்றும் சாரம் அணிந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கம் கொள்ளை - பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு