பொலிஸாரின் விசேட தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் கைது!
இலங்கை முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான பொலிசாரின் தேடுதல் நடவடிக்கைகளில் 589 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றுமுன்தினம் (05) வரையான காலகட்டத்தில் 28,147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, 589 சந்தேக நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயல்கள் தொடர்பாக 22 பேர் நேரடியாக அடையாளம் காணப்பட்டதுடன், பிடியாணை நிலுவையில் இருந்த 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
மேலும், இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 57 பேரையும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் 78 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,289 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனது மகளுடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா... புகைப்படங்கள் இதோ Cineulagam
திருமண ஏற்பாடுகளுக்கு இடையில் நடேசனால் ஏற்பட்ட பிரச்சனை, செம கோபத்தில் சோழன்... அய்யனார் துணை சீரியல் Cineulagam