பெண் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்! - பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை
ராகம வைத்தியசாலையில் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி தொடருந்து விபத்தில் காயமடைந்ததாக கூறப்படும் பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு விபத்தில் உயிரிழந்த பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறித்த பெண் 45 வயதுடைய அழகிய சருமம், கறுப்பு - வெள்ளை முடி மற்றும் 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், வெள்ளை நிற மேலாடை மற்றும் வெளிர் ஊதா நிற பாவாடை அணிந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
