நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்குபதிவு இடம்பெறும் வாக்குச் சாவடிகளை சுற்றி தேவையற்ற கூட்டங்களை தவிர்க்குமாறு அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வாக்குச் சாவடிக்குச் சென்று, வாக்களித்துவிட்டு அமைதியாக வெளியேறுமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
வாக்குச் சாவடிகளுக்கு அருகில் நின்று பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடி
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்புக்காக ஏராளமான பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இன்றும் நாளையும் நாடு முழுவதும் 24 மணி நேரமும் பொலிஸ் நடமாடும் ரோந்துகள் இயங்கும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.