வட மாகாணத்தில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார்
வடமாகாணத்தில் அதி கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வவுனியா பொலிஸார் அகற்றியுள்ளதுடன், தொடர்ந்தும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இன்றும் (18) தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
தேர்தல் திணைக்களத்தின் கட்டுப்பாடுகள்
வவுனியா நகரம், குருமன்காடு, திருநாவற்குளம், யாழ்வீதி, தாண்டிக்குளம், நகரப்பகுதி என்பவற்றில் வலம் வந்த பொலிஸார் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.
தேர்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தேர்தல் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் நிறைவடையும் நிலையில் பொலிஸார் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, 9000 வரையிலான தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் வடமாகாணத்தில் வவுனியாவிலேயே அதிக சுவரொட்டிகள் அகற்றபட்டுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
