சுரேஷ் சாலேவுக்கு சிறைக்குள் உயிர் அச்சுறுத்தல்..! வதந்திகளுக்கு தக்க பதிலடிக் கொடுத்த பொலிஸார்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு எந்தவொரு அநீதி இழைக்கப்படவோ, விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்படவோ இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்பு இருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலே குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பொலிஸ் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அநீதி இழைக்கப்படவில்லை..
உதய கம்மன்பில குற்றம் சாட்டியது போன்று, சுரேஷ் சாலேவை பொலிசார் தாக்கவோ அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தவோ இல்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்து.

ஏனைய கைதிகளைப் போன்றே சுரேஷ் சாலே ஒரு சாதாரண சந்தேக நபராகவே நடத்தப்பட்டார்.
அத்துடன், அவருக்கு எந்தவிதமான விசேட சலுகை வழங்கப்படவோ அல்லது அநீதி இழைக்கப்படவோ இல்லை என்றும் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.