ருவன்வெலிசாய விவகாரம்.. முக்கிய தேரர்களிடம் பெறப்பட்டுள்ள வாக்குமூலம்
ருவன்வெலிசாய அருகே சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேர்ரகளிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அனுராதபுரத்தில் உள்ள ருவன்வெலி மகா சேய அருகே பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உடன் பிக்குகள் குழுவொன்றும் தொடங்கிய சத்தியாகிரகம், நேற்று (08) இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இந்நிலையில் புனிதப் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு அந்தக் குழுவிற்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாக்குமூலம் பதிவு
இதற்கிடையில், நேற்று (08) சத்தியாகிரகம் நடந்த இடத்திற்கு வந்த பொலிஸார், பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்ற உத்தரவு குறித்துத் தெரிவித்தனர்.

அப்போது, பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் பொலிஸாருக்கு உண்மைகளை விளக்கி, தாம் தொடர்ந்தும் அந்த இடத்தில் தங்கியிருக்கப் போவதாக உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், இன்று பிற்பகல், அனுராதபுர பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், பலாங்கொட கஸ்ஸப்ப தேரரிடம் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.